RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Navarathri Celebration - 2023

24.10.23 03:46 PM By thanjavur

நவராத்திரி முதல் நாள் - 15.10.23

தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில், இயற்கையன்னையைப் போற்றும் வகையில் முளைப்பாரி வைத்து நவராத்திரி விழா தொடக்கம். குருதேவருக்கு நாட்டியாஞ்சலியும், கிராமக் குழந்தைகளின் கும்மியாட்டம் இன்றைய சிறப்பம்சங்கள்.

நகர மையத்தில், பின்வரும் நிகழ்ச்சிகள்: வேத பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், பிறகு தவத்திரு சுவாமி ஆத்மகணானந்தரின் அருளாசி.

First day of Navratri - 15.10.23
At the village center of Thanjavur Sri Ramakrishna Math, the Navratri festival begins with mulaiparri in honor of nature.  Natyyanjali to Gurudev and Kummiyattam by village children are the highlights of the day.
In the city center, the following programs are: Vedic Recitation, Lalita Sahasranama Recitation, then Arulasi by Tavathiru Swami Atmaganananda.
First day of Navratri - 15.10.23
நவராத்திரி இரண்டாம் நாள் - 16.10.23

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில், குழந்தைகள் அயிகிரி நந்தினி.... பாடினர். இந்திராம்மா தேவியின் அருளைப் பற்றி உரையாற்றினார்.

நகர மையத்தில், திருமதி விஜயஸ்ரீ ராமனின் பஜனையும், திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகளின் சிறப்புக் கச்சேரியும் இன்றைய சிறப்பம்சங்கள். 

Navratri Second Day - 16.10.23
At the village center of Thanjavur Sri Ramakrishna Math, children sang Aigiri Nandini....  and Indiramma gave a talk on the grace of Divine Mother.

Today's highlights was bhajan by Smt. Vijayashree Raman and a special concert by the students of Tamil Nadu Government College of Music, Thiruvaiyaru in the city centre.
Navratri Second Day - 16.10.23
துர்காஷ்டமி பூஜை - ஞாயிற்றுக்கிழமை - 22. 10. 23

ஸ்ரீ துர்கா தேவி அசுர சக்திகளை வதம் செய்த அஷ்டமி தினத்தன்று தேவிக்குச் சிறப்பு பூஜை, ஹோமம், தீபாராதனை, புஷ்பாஞ்சலி மற்றும் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது.

Durgashtami Puja - Sunday - 22. 10. 23

On the day of Ashtami, when Sri Durga Devi slayed the demonic forces, special pooja, homam, Deeparathana, pushpanjali and distribution of prasad to the devotees were held.
Durgashtami Puja - Sunday - 22.10.23
நவராத்திரி துர்காஷ்டமி -ஞாயிறு 22.10.23

நவராத்திரியின் எட்டாம் நாளன்று மாலை குழந்தைகளின் பஜனையும் அருமையான நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கிராம மையத்தில் தியானப் பயிற்சியும் துர்கா தேவிக்கு புஷ்பாஞ்சலியும் செய்யப்பட்டது.

நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் லேமினேட் செய்யப்பட்ட தெய்வத்திருமூவரின் படங்கள் வழங்கப்பட்டன. நிச்சயமாக அந்த திருவுருவப் படம் எந்த இல்லங்களில் வைக்கப்படுகிறதோ, அங்கு எல்லாவித நன்மைகளும் உண்டாகும் என்பதில் முழு நம்பிக்கை உண்டு.
https://photos.app.goo.gl/ifSTXDtrDRYPBg3y6

Navratri Durgashtami - Sunday 22.10.23

On the evening of the eighth day of Navrathri, children's bhajans and wonderful dance performances were held.

Meditation and pushpanjali to Goddess Durga were performed at the village centre.

All those who participated in the Navrathri programs were given a laminated picture of the Holy Trio.
Navratri Durgashtami - Sunday 22.10.23
நவராத்திரி நவமி - திங்கள் - 23.10.23

நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று மாலையில் தேசத் தலைவர்களையும் தெய்வத்திரு உருவங்களையும் வரையும் ஓவியத் திருவிழா நகர மையத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக வரையப் பெற்ற ஆறு ஓவியங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் புத்தகங்களும் கீ செயின்களும் பரிசாக வழங்கப்பட்டன. 

திரு தத்தாத்ரேயன் சிறந்ததொரு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.

கிராம மையத்தில் சுவாமி நரவரானந்தர் குழந்தைகளை ஆசீர்வதித்தார். திரு தத்தாத்ரேயன் பஜனை பாடி மகிழ்வித்தார். 

Navratri Navami - Monday - 23.10.23

Today a painting festival was held in the center of the city to paint images of national leaders and divine deities.  About 60 students participated in this.  Prizes were awarded to the six best paintings.  All were gifted with books and key chains.

Sri Dattatreyan delivered an excellent spiritual discourse.

Swami Naravarananda blessed the children at the village center. Sri Dattatreyan entertained by singing bhajans.
Navratri Navami - Monday - 23.10.23

thanjavur