Navaratri Celebration - Day 1 -26.09.2022
Navaratri Celebration - Day 1 -26.09.2022
நவராத்திரி விழா ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் கிராம மையம் முதல் நாள் - 26.9.22
லட்சுமி அஷ்டோத்திரம் குங்கும அர்ச்சனை
Navaratri Festival, Sri Ramakrishna Math, Village Center First Day - 26.9.22
Lakshmi Ashtotram Kumkum Archanai
நவராத்திரி விழா ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நகர மையம்- முதல் நாள் நிகழ்ச்சி.
லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாமி யோகிராஜானந்தரின் ஸ்தோத்திர பாராயணம், வேளாக்குறிச்சி ஆதீனம் வழங்கிய ஆசியுரை.
Navaratri Festival Sri Ramakrishna Math City Center- Day 1.
Sri Lalitha Sahasranama Parayanam, Swami Yogirajananda's Stothra Parayanam, benediction by Velaakurichi Adheenam.
Navaratri Celebration - Day 2 -27.09.2022
Navaratri Celebration - Day 2 -27.09.2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர், நகர மையத்தில் நவராத்திரி இரண்டாம் தினம் 27.9.22.
விகடகவி என்ற கலை இன்று அபூர்வம். விகடம் என்பது நகைச்சுவையாகவும் கேலியாகவும் பேசி மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறுவது. நவராத்திரி விழாவில் இன்று விகடகவி கலைமாமணி குன்னியூர் ஆர். கல்யாண சுந்தரம் சிறப்பான நிகழ்ச்சியை வழங்கினார்.
Navaratri Second Day 27.9.22- Sri Ramakrishna Math, Thanjavur, City Centre.
The art of Vikadakavi is rare today. Vikadam means imparting good ideas by fun. Vikadavi Kalaimamani Kunniyur R.Kalyanasundaram gave an good show today.
நவராத்திரி இரண்டாவது தினம் 27.9.22- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர், கிராம மையம்.
முளைப்பாரியுடன் குரு தேவர் சன்னதி, சுவாமி யோகிராஜானந்தரின் பஜனையை ஆழ்ந்து ரசித்த கிராமக் குழந்தைகள்.
Navratri Second Day 27.9.22- Sri Ramakrishna Math, Thanjavur, Village Centre.
Gurudeva Sri Ramakrishna shrine with Mulaipari, village children who enjoyed Swami Yogirajananda's bhajan.
Navaratri Celebration - Day 3 -28.09.2022
Navaratri Celebration - Day 3 -28.09.2022
Navaratri is celebrated in different ways by people. But see how the children of Visva Kothamangalam Free Tuition Centre, Thiruthuraipoondi, run by Sri Ramakrishna Math, Thanjavur, celebrate Navratri in their own way.
நவராத்திரி விழாவினைப் பல்வேறு இடங்களில் மக்கள் பலவிதமான வகைகளில் கொண்டாடுகிறார்கள். ஆனால் வசதியற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் நடத்தும் திருத்துறைப்பூண்டி, விஸ்வ கொத்தமங்கலம் இலவச டியூஷன் சென்டரின் குழந்தைகள் தங்களுக்கே உரித்தான விதத்தில், நவராத்திரியை கொலு வைத்துக் கொண்டாடும் விதத்தைக் காணுங்கள்.
28.9.22- On the third day of Navaratri festival in the city center, Thiruvaiyaru, Tamil Nadu Govt College of Music students gave excellent performance.
In village centre Valappakudi Sri. Veerashankar's group musical performances went well.
28.9.22- மூன்றாவது தின நவராத்திரி விழாவில் நகர மையத்தில் திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவ- மாணவிகளின் இன்னிசை மற்றும் கிராம மையத்தில் வளப்பக்குடி திரு. வீரசங்கர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் இனிதே நடந்தன.
Navaratri Celebration - Day 4 -29.09.2022
Navaratri Celebration - Day 4 -29.09.2022
நவராத்திரியில் நான்காவது தினம்- 29.9.22- புதன்கிழமை.
அலை அலையாகத் தொடர்ந்து வரும் தேவியின் அழகை வர்ணிக்கும் சௌந்தர்ய லஹரியின் சாராம்சத்தை ஸித்தன்வாழூர் ஸ்ரீராம் சாஸ்திரிகள் அருமையாக விளக்கினார். தேவியின் அருள் வேண்டுவோர் அவசியம் கேட்க வேண்டிய உபன்யாசம் இது.
கிராம மையத்தில், சிரிப்பும் சிந்தனையும் நல்கிய விகடகவி ஆர் கல்யாண சுந்தரம் அவர்களின் உரை இடம்பெற்றது.
Fourth day of Navratri- 29.9.22- Wednesday.
Siddhanvazhur Sriram Shastri beautifully explained in Tamil the essence of Soundarya Lahari, which describes the beauty of the Goddess that comes in waves.
At the village centre, there was a speech by Vikadakavi R Kalyana Sundaram, who was full of laughter and thought.
Navaratri Celebration - Day 5 -30.09.2022
Navaratri Celebration - Day 5 -30.09.2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர், நகர மற்றும் கிராம மையத்தில் நவராத்திரி ஐந்தாம் தினம் 30.9.22.
மன இருளைப் போக்கும் விளக்கு பூஜை.
செல்வி ஸ்ரீதர்ஷினியின் உன்னதமான நவதுர்கை பற்றிய சங்கீத உபந்யாசம்
கிராம மையத்திலும் விளக்கு பூஜை
Navaratri Fifth Day 30.9.22 - Sri Ramakrishna Math, Thanjavur, City and Village Centres.
A wonderful lamp puja that removes mental darkness.
Sangeeta Upanyasam on the classic Navadurga by Ms. Sridharshini
Lamp puja at the village center
Navaratri Celebration - Day 6 -01.10.2022
Navaratri Celebration - Day 6 -01.10.2022
நவராத்திரி ஆறாம் நாள் 1.10.22- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய மையம். இன்று இரண்டு புகழ்பெற்ற நடனக் குழுக்கள், ஸ்ரீ சக்தி நாட்டிய கலாலயம் மற்றும் ஸ்ரீ நிருத்யாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகள் நமது இரு மையங்களிலும் தங்களது சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கின.
Navaratri Sixth Day 1.10.22- Sri Ramakrishna Math, Thanjavur.
Thanjavur is a cultural and traditional hub. Today students from two eminent dance groups, Sri Sakthi Natyakalalayam and Sri Nrityanjali Natyakalalayam gave their performances in both our centres.
Navaratri Celebration - Day 7 -02.10.2022
Navaratri Celebration - Day 7 -02.10.2022
நவராத்திரியில் இன்று சப்தமி, ஏழாம் தினம்- 2.10.22- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
நேற்று போலவே இன்றும் பக்திப் பாடல்களுக்குக் குழந்தைகளின் அருமையான நாட்டிய அஞ்சலி அன்னை துர்கா தேவிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. கிராம மையத்தில் நிகழ்ந்த நாட்டிய அஞ்சலியின் சிறு வீடியோக்களைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடையுங்கள்.
Navaratri Saptami, seventh day- 2.10.22- Sri Ramakrishna Math, Thanjavur.
Like yesterday, children's beautiful dance tributes to devotional songs were offered to Mother Goddess Durga. Enjoy two short videos of the Nattiyanjali that took place at the village center.
Navaratri Celebration - Day 8 -03.10.2022
Navaratri Celebration - Day 8 -03.10.2022
நவராத்திரியில் அஷ்டமி தினத்தில் இன்று காலை சிறப்பு பூஜையும் ஹோமமும் நடைபெற்றன.
A special puja and homam was held this morning on the Ashtami day of Navratri.
நவராத்திரியில் இன்று எட்டாம் தினம்- 3.10.22- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
நகர மையத்தில் காலையில் சிறப்பு பூஜையும் ஹோமமும் நடைபெற்றன.
மாலை 'தேவியின் அருளை பெறுவது எப்படி?' என்ற தலைப்பில் சுவாமி விமோக்ஷானந்தரின் அருமையான உபன்யாசம் நடைபெற்றது.
கிராம மையத்தில் நல்லாசிரியர் ஜெ. பாலகுரு ஐயா அவர்களின் சிறப்புரை நிகழ்ந்தது.
Navaratri Celebration - Day 9 -04.10.2022
Navaratri Celebration - Day 9 -04.10.2022
நவராத்திரியில் இன்று ஒன்பதாம் தினம்- 4.10.22- சரஸ்வதி பூஜை முன்னிட்டு தேவ தேவியர்கள் மற்றும் தேசத் தலைவர்களை வரையும் ஓவியப்போட்டி.
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திரு. திருவள்ளுவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளரும் ஓவியர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
ஆரதிக்குப் பிறகு மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். President of The Tamil Chamber of Commerce, திரு சோழ நாச்சியார் ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கிராம மையத்தில் தவத்திரு சுவாமி விமோக்ஷானந்த மகராஜ் அருளுரை வழங்கினார்.
Nineth day of Navaratri- Saraswati Puja, 4.10.22- Drawing competition of Hindu Gods and Goddess and National Leaders.
The Tamil University, Thanjavur, Vice Chancellor Dr. Thiruvalluvan was the special guest and presented prizes to the budding artistes.
After the Aarti the students of Morning Star School performed various cultural programs. President of The Tamil chamber of commerce, Mr. Chola Nachiar Rajasekhar, Chennai attended as special guest.
Srimad Swami Vimokshananda Maharaj gave benediction at the village center.
Navaratri Celebration - Day 10 -05.10.2022
Navaratri Celebration - Day 10 -05.10.2022
விஜயதசமி 5.10.22- நவராத்திரியை முன்னிட்டு நமது பாரம்பரிய வழக்கமான முளைப்பாரியை வளர்த்து நதி தேவதையிடம் இன்று அர்ப்பணித்தோம்.
கிராம மையத்தில் உள்ள மூன்று குழந்தைகளுக்குக் கல்வியின் தொடக்க மங்கள நிகழ்ச்சியான அக்ஷராப்யாசமும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமி 5.10.22- பெண்களுக்கு உரிய மரியாதையும் கல்வியும் கொடுக்காத காரணத்தால்தான் நம் நாடு முன்னேறாமல் போய்விட்டது என்று சுவாமி விவேகானந்தர் உரைத்தார்.
இந்த நவராத்திரியில் ஒன்பது தினங்கள் பண்பாட்டு- கல்வி -ஆன்மீகம்- பாரம்பரியம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முத்தாய்ப்பாகப் பெண்களை மரியாதை செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரமற்ற, மாற்றுத்திறனாளி பெண்கள், திருநங்கைகள், துப்புரவு பணிப்பெண்கள் ஆகியோரை மடத்திற்கு அழைத்து அவர்களையே தேவிகளாக பாவித்து நேற்று பூஜை செய்தோம்.
வஸ்திர தானத்தோடு திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்காக கறவைப் பசுக்களை வழங்கினோம். அதன் மூலம் 27 திருநங்கைகள் தாங்கள் உழைத்துச் சம்பாதிப்பதற்கான தொடக்கம் அன்னை ஸ்ரீசாரதையின் அருளால் விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.