🌸 இன்றைய சேவை – 24, 25 அக்டோபர் 2026, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை - சேவாலயா ஊழியர் மற்றும் தொண்டர்களுக்கான சிறப்பு முகாம் – முதல் நாள் முற்பகல் நிகழ்ச்சிகள்
* சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு சேவை அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான சென்னையைச் சேர்ந்த சேவாலயா, கடந்த 38 ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மக்கள் சேவையாற்றி வருகிறது.
* மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆன்மிக ஊக்கமும் பண்பாட்டு வலிமையும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சேவாலயாவின் 55 ஊழியர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் நமது மடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
* பணியைச் சேவையாகச் செய்வது குறித்து கருத்தரங்குகள், குழு விவாதங்கள், சுவாமி விவேகானந்தர் மீதான உரைகள், தியானப் பயிற்சிகள், பக்தி பஜனைகள் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* சிறந்த இயற்கை வேளாண்மைக்காக பாரதப் பிரதமரிடமிருந்து விருது பெற்ற திரு கோ. சித்தர்,
* “மனிதநேய மருத்துவர்” விருது பெற்ற டாக்டர் முரளி,
* சரஸ்வதி நூலகத்தின் நூலகரும் தமிழறிஞருமான முனைவர் மணி. மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
* சுவாமி விமூர்த்தானந்தர் ஆசியுரையும் ஊக்க உரையும் வழங்கினார்.
* சென்னையைச் சேர்ந்த செல்வி லாவண்யா இனிமையான பக்திப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
* “விவேகானந்தரின் கனவு இந்தியாவும் சேவாலயாவின் கிராமப்புறப் பணிகளும்” என்ற தலைப்பில் குழுவாக ஆலோசனை செய்யப்பட்டது.
* “நமது உண்மையான நண்பர் யார்?” என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் உற்சாகமூட்டும் உரையாற்றினார். பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, போட்டியிடுவது ஆகிய மனித மனத்தின் இயல்பான இரு இயல்புணர்ச்சிகளை எவ்வாறு வெல்லலாம் என்பதை அவர் விளக்கினார்.
* தெய்வத் திருமூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பிக்கப்பட்டது.
* சாரதா வனத்தில் சுறுசுறுப்பான நடைப்பயணம் நடைபெற்றது.
Service Activities – 24–25 October 2026, Saturday and Sunday
🌷 Inspired by Swami Vivekananda’s ideals, numerous service organisations have been established across India. Among them is Sevalaya, based in Chennai, which has been serving society wonderfully well in various fields for the past 38 years.
🌷 A special two-day camp for 55 Sevalaya staff members was held at our Math to provide spiritual inspiration and cultural strength to those engaged in serving others.
🌷 The programme included seminars on approaching work as service, group discussions, talks on Swami Vivekananda, guided meditation, devotional bhajans and collective arati.
🌷 Special addresses were delivered by:
* Sri G. Siddhar, who received an award from the Prime Minister of India for excellence in natural farming.
* Dr. Murali, recipient of the “Humanitarian Doctor” award.
* Dr. Mani Maran, librarian and Tamil scholar at the Saraswathi Mahal Library.
* Swami Vimurtananda delivered a benedictory address and an inspiring talk.


