இன்றைய சேவை – 2.4.26 – வியாழக்கிழமை – மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி
கும்பகோணம் அருகிலுள்ள கஞ்சனூரில் இயங்கி வரும் விவேகானந்தா வித்யாலயா ப்ரைமரி & நர்சரி பள்ளி இன்று தனது 24-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
பொதுவாக ஆண்டு விழா என்றாலே பரிசுகள், ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டம் ஆகியவையே முக்கியமாக இடம்பெறும். ஆனால், இந்தப் பள்ளியில் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கிடையே ஆழமான இந்து பண்பாட்டின் அடிப்படையில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கவனமாக எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்துகொண்டு வழிநடத்தினார்.

