Maruthuvakkudi Kumbhabishekam - 18.11.2022

23.11.22 02:47 PM - By thanjavur

இன்றைய சேவை- 18.11.22

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டு வரும் 20-ம் தேதி கோயில் மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி,
சுண்ணாம்பு, கடுக்காய், கற்றாழை, வெல்லம் ஆகியவை கொண்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கங்கை, யமுனை, கோதாவரி, சிந்து, நர்மதை, சரஸ்வதி, தலைக்காவிரி உள்ளிட்ட 45 நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு பூஜை நடைபெற்றது.

சுவாமி அம்பாள் விநாயகர் முருகன் மூலவர் விமானங்கள் கலசம் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. இந்த விழாவில் பல ஆதீனங்களும் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். 500 பக்தைகள் புனித நீர் குடங்களுடன் வந்து அபிஷேகம் செய்தது அருமையான காட்சி.


Maruthuvakkudi Kumbhabishekam - 18.11.2022

thanjavur