RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

A free Medical and Health Camp -  August 2023

16.06.24 11:41 AM By thanjavur


இன்று இந்தச் சேவையைச் செய்தோம்- 1.8.23 - செவ்வாய்க்கிழமை

பல சேவைகள் நம்மடத்தின் மூலம் நடந்தாலும் இன்று இறைவன் நமக்கு இட்ட பணி அருமையான ஒன்று.

தஞ்சாவூரில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் 131 மாணவ மாணவிகளுக்குப் பல் பரிசோதனை சேவை நடைபெற்றது. 

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களும் மாணவர்களின் பல் பரிசோதனைக்கு ஒத்துழைத்தார்கள். நந்தினி பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலமுருகன் மற்றும் டாக்டர் ஹரிநிவேதித்தா ஆகியோர் நிறைவாக சேவையாற்றினர்.

காது கேளாத, வாய் பேசாத அந்த மாணவ மாணவியர்கள் கண்கள் மூலம் காட்டிய நன்றி மறக்க முடியாத ஒன்று.

Today's service - 1.8.23 - Tuesday

Although many services are done through us, the work that the Lord gave us today is a wonderful one.

Dental check-up service was conducted for 131 students of Government Higher Secondary School for Hearing Impaired in Thanjavur. All the teachers of the school cooperated in the dental examination of the students.  Director of Nandini Dental Hospital Dr. Balamurugan and Dr. Harinivedittha were officiating.

The gratitude shown by the eyes of the deaf and mute students is unforgettable.

Free Dental Checkup on 01.08.2023
இன்று இந்தச் சேவையைச் செய்தோம்! - 3.8.23- வியாழன்

குழந்தைகளின் இதயம் சீராகச் செயல்படுகிறதா? சிகிச்சை தேவைப்படுகிறதா என்பதைக் காண்பதற்கான ஒரு மருத்துவ முகாம் இன்று தஞ்சாவூர், விநாயகா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் மடத்தின் மூலம் நடைபெற்றது.

அதோடு ஆடிப்பெருக்கை முன்னிட்டு அந்தப் பிள்ளைகளுக்கு அவல்பொரி, கடலை, சர்க்கரை, தேங்காய் சேர்ந்த பிரசாதம் வழங்கப்பட்டது. காவிரியில் ஆடிப்பெருக்கைப் போல் இன்று அந்த 250 மாணவ மாணவிகளின் வாழ்க்கையிலும் இன்பம் பெறுக வேண்டி இந்தச் சேவையைச் செய்ய முடிந்தது.

டாக்டர் மணிராம் மற்றும் டாக்டர் உஷா நந்தினி ஆகிய இருவரும் சிறந்த சேவையை நல்கினார்கள்.

Congenital Heart Disease Screening Among Children - Free Camp on 03.08.2023, Thursday

 

Children's hearts should be healthy and disease-free. With that intention, on behalf of our Math, the services of Dr. Usha Nandini Maniram and Dr. Maniram were provided to 250 children studying at Sri Vinayaga Nursery and Primary School, Thanjavur.

Congenital Heart Disease Screening Among Children - Free Camp on 03.08.2023, Thursday
இன்று இவ்வாறு சேவை செய்தோம்- 20.8.23- ஞாயிறு

ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நிகழ்ந்தது. மொத்தம் 50 பேர் பயனடைந்தனர்.

Today's service - 20.8.23- Sunday

A free eye check-up camp organized by Sri Ramakrishna Math and Vasan Eye Care took place today. A total of 50 people benefited.

Free eye check-up camp on 20.08.2023, Sunday

இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 20.8.23- ஞாயிறு

இன்று நமது கிராம மையத்தில் மாரியம்மன் கோவில் பகுதியில் எம். ஆர். மருத்துவமனையுடன் இணைந்து ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் சுமார் 30 ஏழை மக்கள் பயனடைந்தார்கள்.

Today's service- 20.8.23- Sunday

Today in our village center in the Mariamman temple area, a free medical camp for the poor was conducted in association with the M.R. hospital. About 30 poor people benefited from it.

A free Medical and Health camp in our village centre on 20.08.2023

இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 27.8.23- ஞாயிறு

தஞ்சாவூர் மானம்புச்சாவடியில் இன்று இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 58 பேர் பயனடைந்தார்கள்.

Today's service - 27.8.23- Sunday

A free dental check-up camp was held today at Thanjavur Manampuchavadi. 58 people benefited.

Free Dental Checkup on 27.08.2023

thanjavur