RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

யாத்திரை- சுவாமி விமூர்த்தானந்தர்

26.10.22 02:58 PM By thanjavur

இன்று காசி திருநகரில் யாத்திரை- 26.10.22, புதன்கிழமை. சுவாமி விமூர்த்தானந்தர்

காசியில் வசிப்பதற்கும் யாத்திரை மேற்கொள்வதற்கும் முதலில் காலபைரவரின் அருளாணை கிடைக்க வேண்டும். அவரை தரிசித்தோம். 

பிறகு தண்டபாணி பைரவர் தரிசனம், ஸ்ரீ காமகோடி ஈஸ்வர் தரிசனம், திலபாண்டேஸ்வர். காசியில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் விஜயம் செய்த இல்லம். அவர் அப்போது அமர்ந்த சந்தன கட்டிலின் மீது அவரது திருஉருவப்படம் மற்றும் பல தேவியர்களின் படங்களும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன. 

யாம் பெற்ற பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டி சில புகைப்படங்கள் ஒரு வீடியோவுடன். 

ஹர ஹர மஹாதேவ்! 

அதற்கு முன்பு பேலூர் மடம் சென்று பரமபூஜனீய பிரசிடெண்ட் மகாராஜிடம் ஆசி பெற்றோம்.
காசி திருநகரில் யாத்திரை- 26.10.22, சுவாமி விமூர்த்தானந்தர்
காசி யாத்திரை-26.10.22- மாலை. 

காசி, ஸ்ரீ பசுபதேஸ்வரர் ஆலயம், மணிகர்ணகேஸ்வரர், அபயானந்தா ஆசிரமம், சுவாமி விவேகானந்தரை மகனாகப் பிறக்க வேண்டி அவரது தாயார் புவனேஸ்வரி தேவி வழிபட்ட ஆத்ம வீரேஸ்வரர் (ஒரு துறவி பூஜிக்கும் படம்) மற்றும் பிரகஸ்பதேஸ்வரர் ஆகிய ஆலயங்களை நேற்று தரிசித்தோம். 

காசி மாநகரில் உடலை விடும் புண்ணிய ஆத்மாக்களுக்கு சிவபெருமானே தாரக மந்திரத்தை வழங்குகிறார் அல்லவா? அவ்வாறு உயிர் நீத்த உடல்களை எரியூட்டும் நிகழ்வே அனைவருக்கும் அறிவூட்டும்..... நிலையாமை பற்றிய அறிவூட்டும். 

ஒரு நிமிட வீடியோ பதிவை நீங்களும் காணுங்கள்.
காசி திருநகரில் யாத்திரை- 26.10.22, சுவாமி விமூர்த்தானந்தர்

காசி யாத்திரை 27- 10 -22 மாலை- சுவாமி விமூர்த்தானந்தர்

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அதிசய சீடரான சுவாமி அத்புதானந்தர் என்ற லாட்டு மகராஜ் காசி ஸ்ரீராமகிருஷ்ண அத்வைத ஆசிரமத்தில் தங்கிய அறை இது. பெரும் தபஸ்வியான அந்த மகானின் சாந்தித்யத்தை இன்றும் உணரலாம்.

மிகப் பெரும் ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 30000 மாணவ மாணவிகளுடன் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியின் மைய கருத்து ஆன்மீகம் என்ற அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் நடுவே பிரம்மாண்டமான பிர்லா மந்திர் உள்ளது. பல்வேறு விதமான ஹிந்து சாஸ்திரங்களின் முக்கிய கருத்துகள் அங்கு அழகாகப் பதிக்கப்பட்டுள்ளன. பல தேவதேவியர்கள் அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள்.

காசியில் உள்ள துர்கா மந்திருக்குப் போகும்போது குரங்குகள் அவரைத் துரத்தின. "பலவீனத்தை எதிர்த்து நில்' என்ற உன்னத கருத்தை அங்குதான் அவர் பெற்றார்.

அந்த மந்திர் தடாகத்துடன் விளக்கொளியில் ஜொலிப்பதைப் பாருங்கள்.‌

காசி யாத்திரை 27-10-22 மாலை- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று ப்ரயாக்ராஜ் மற்றும் திருவேணி சங்கம யாத்திரை - 28.10.22- சுவாமி விமூர்த்தானந்தர் 

சக்தி பீடங்களில் ஒன்றான விந்தியாசலத்தின் விந்தியவாசினி அன்னையை தரிசித்தோம். சுவாமி பிரம்மானந்தர் இங்கு வந்தபோது அவர் ஆன்மீகப் பரவச நிலையை அடைந்தாராம். 

பிறகு காளிதேவியையும் அஷ்டபுஜ தேவியையும் தரிசித்தோம். 

பிறகு அலகாபாத் ராமகிருஷ்ண மடத்தை தரிசித்தோம். அங்கு குரு தேவர் சற்று கம்பீரமாகவே வீற்றிருக்கிறார். ஜூம் செய்து பாருங்கள். 

பிற்பகல் திருவேணி சங்கம ஸ்நானம் மற்றும் தரிசனம். மூன்று நதி தேவிகளான கங்கை, யமுனை மற்றும் அந்தர் வாகினியாகச் செல்லும் சரஸ்வதி தேவிகள் சங்கமிக்கும் அற்புத தலம் இது. இதனை ஒரு நிமிட வீடியோவில் காணுங்கள். 

சங்கமத்தில் கங்கையன்னை குளிர்ச்சியாகவும். யமுனா மாதா சற்று வெப்பத்துடனும் விளங்குகின்றனர். அனைவரின் க்ஷேமத்திற்காகவும் ஸ்நானம் செய்யப்பட்டது. 

பிறகு அனுமன் கோவில், அனைத்து தெய்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் கோவில்,  நிறைவாக மற்றுமொரு சக்தி பீடமான ஸ்ரீஅலோ பி சங்கரிமாதாவின் தரிசனம். பார்வதி தேவியின் வலது கை விழுந்த சக்தி பீடம் இது.
ப்ரயாக்ராஜ் மற்றும் திருவேணி சங்கம யாத்திரை - 28.10.22- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று அயோத்தியா யாத்திரை- 29.10.22- சுவாமி விமூர்த்தானந்தர் 

அயோத்தியில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் தற்போது உருவாகி வருகிறது. 

காலையில் ராமஜென்ம பூமியை தரிசித்தோம். அங்கு புதிதாகக் கோவில் எழுப்பப்பட்டு அது நிலைத்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனும் மனதில் உறுதி கொள்ள வேண்டும். நாம் தோற்கப்பட்ட இனம் அல்ல என்பதை நிரூபிக்கும் வரலாற்றுச் சின்னமாக அது திகழ இருக்கிறது. 

அடுத்து அனுமனுக்கான பெரிய கோவில் அனுமன் கடி, தசரத சக்கரவர்த்தியின் மாளிகை, கனக பவன் ஆகியவற்றைத் தரிசித்தோம். 

இங்குள்ள பக்தர்களின் பக்தியைப் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. இந்த இறைபக்தியுடன் இந்து சமய அறிவோடு அது தொடர்பான அனைத்தையும் பாதுகாப்பதில் நமது பங்கும் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் இந்து மதம் என்றும் உள்ள மதம் ஆகிவிடும். 

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் நினைவாக அரசு ஒரு பெரிய வீணைச் சிலையை சரயு நதிக்கரையில் சமீபத்தில் அமைத்துள்ளது. 

முடிவில் சரயு நதியில் புனித நீராடல். உங்களுக்காக ஒரு நிமிட வீடியோ காணுங்கள்.
அயோத்தியா யாத்திரை- 29.10.22- சுவாமி விமூர்த்தானந்தர்

காசி அன்னபூர்ணா தேவி தீபாரதனை

2.11.22-Tuesday- Davathiru Swami Gautamanandaji Maharaj inaugurated the prayer hall of the first branch of Ramakrishna Mission - a grand value education center - in Gurugram, Haryana.

thanjavur