கும்பகோணத்தில் நேற்று அமாவாசை தினத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளின் முகங்களில் பௌர்ணமி தோன்றிய ஒரு நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 37 ஆண்டுகளாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கமிட்டி நமது பாரம்பரிய சம்ஸ்காரங்களைப் புகட்டும் பல சிறந்த போட்டிகளை மாணவர்களுக்காக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 60 பள்ளிகளில் இருந்து சுமார் 3500 மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் 825 பேருக்கு பரிசுகள் வழங்கும் விழா ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் 25. 9. 22 ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஆம், அமாவாசை அன்று குழந்தைகளின் முகத்தில் பௌர்ணமி தோன்றிய நல்ல நிகழ்ச்சி அது. நமது பண்பாட்டையும் சமய கருத்துகளையும் மக்களிடத்தில் ஒருங்கே கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது.