இன்றைய சேவை - 26.1.23 - குடியரசு தினம்.
நாட்டில் நல்லாட்சி நடந்திட குடியரசு அமைந்தது. அதுபோல் நம்மிடையே தெய்வீக ஆட்சி நடந்திட எத்தனையோ அருளாளர்கள் தோன்றி வழிகாட்டி உள்ளார்கள்.
அவர்களுள் ஸ்ரீ தியாக பிரம்மத்தின் பிரதான சீடரான ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அய்யம்பேட்டையில் அவரது திருநாமத்தில் ஒரு சங்கீத மாளிகை கட்டப்பட்டுள்ளது.
அந்த மாளிகையைத் திறந்து வைத்து ஆசியுரை வழங்கத் திருவருள் கூட்டி வைத்தது.

