சுவாமி விவேகானந்தர் ஒரு முறை அவரது தாய் மறைந்துவிட்டார் என்று ஒரு கெட்ட கனவு கண்டார். அது உண்மையன்று என்று அவருக்கு உண்மையைக் கூறியவர் வலங்கைமானில் வாழ்ந்த கோவிந்த செட்டி என்ற ஜோசியர்.
சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் சென்று பாரத ஆன்மீகத்தைப் பரப்புவார் என்றும் சுவாமிஜியை அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைக் கண் போல் பாதுகாக்கிறார் என்றும் கோவிந்த செட்டி கூறியது வலங்கைமானில்தான்.
சுவாமி விவேகானந்தரோடு சம்பந்தப்பட்ட பாரம்பரியமிக்க அந்த ஊரில் இன்று சுவாமி 'விவேகானந்தர் சேவா சங்கம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த சங்கம் நன்கு செயல்பட்டு சுவாமிஜியின் செயல்வீரர்களாக அதன் அங்கத்தினர்கள் விளங்க வேண்டும் என்று உங்கள் பிரார்த்தனையை எதிர்பார்க்கிறோம்.