Heavy Rain Relief Service
பெரு மழை நிவாரணப் பணிகள்- திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில்- 30.11.21
பெருமழை காரணமாக டெல்டா பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்து விட்டன. விவசாய தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் உணவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
அதற்காக தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலமாக திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய ஒத்துழைப்புடன் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 10 இடங்களில் தினமும் 5000 குடும்பங்களுக்குச் சுட சுட உணவளிக்க உள்ளோம்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சேவை நன்முறையில் நடக்க நமது பிரார்த்தனையும் பிரயத்தனமும்.
Heavy Rain Relief Works - Thiruvarur, Mannargudi, Nagapattinam, Thiruthuraipoondi areas - 30.11.21
Crops in the delta areas have been submerged and severely damaged due to heavy rains in Tamil Nadu. Agricultural workers and day laborers are suffering without food.
Through Thanjavur, Ramakrishna Math, we are going to feed 5000 families daily in 10 places mentioned above for the next three days.
Our prayers and efforts are for the service of Lord Sri Ramakrishna to go well.
பெருமழை நிவாரணப் பணிகள்- 01.12.21- இரவு உணவுச் சேவை
பெருமழை காரணமாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் உணவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
அதற்காக தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலமாக இரண்டாவது தினமாக 10 இடங்களில் 5000 நான் பேருக்குக் காலையிலும் மாலையிலும் சமைத்த சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் சென்று ஏழைகளுக்கு அன்னம் பாலிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
1. அம்மையப்பன்
2. வடகரை
3. கீழமணலி
4. திருத்துறைப்பூண்டி
5. மன்னார்குடி
6. தலைஞாயிறு
7. ராஜாமடம்
நாம் சேவை செய்த மக்கள் நேற்றும் இன்றும் உணவு அளித்ததற்கு மறக்காமல் நன்றி தெரிவித்தனர்.
Heavy Rain Relief Service- 1.12.21
For this, for the second day, 5000 people in 10 places in four delta districts are being served cooked food in the morning and evening.
Today we had the privilege of visiting the following areas and feeding the poor.
1. Ammaiyappan, Thiruvarur
2. Vadakarai
3.Keelamanali
4.Thiruthuraipoondi
5.Mannargudi
6. Talaignayiru
7.Rajamadam
பெருமழை நிவாரணப் பணிகள்- 2.12.21- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் - காலை மற்றும் இரவு உணவுச் சேவை -நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில்.
மூன்றாவது தினமாக 10 இடங்களில் தினமும் இரண்டு வேளை 5000 பேருக்குச் சுவையான உணவு வழங்கப்பட்டது. இன்றும் பல குக்கிராமங்களுக்கும் சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஆக மொத்தம் மூன்று தினங்களில் (30 நவம்பர்,1,2 டிசம்பர்) ஒரு தினத்திற்கு 10,000 பேருக்கு வேண்டிய அளவிற்கு உணவு வழங்கினோம். 30 ஆயிரம் பேர் இந்தச் சேவையை ஏற்றுக்கொண்டனர். மொத்தச் செலவு ரூ. 15 லட்சம் ஆனது.
நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி.