RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா

16.12.22 01:49 PM By thanjavur

அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா 15.12.22- வியாழன்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அன்னைக்கும் சிறப்பு பூஜை, கோவில் வலம், ஹோமம், புஷ்பாஞ்சலி, பிரசாதம், திருமதி பிரியதர்ஷினியின் பக்திப் பாடல்கள், நகர மற்றும் கிராம மையத்தில் குங்கும அர்ச்சனைகள், திரு நடராஜன் ஷியாம் சுந்தரின் அன்னை மீதான உபன்யாசம் ஆகியவை இன்று சிறப்பாக நடைபெற்றன.

முத்தாய்ப்பாக, மடத்தின் அருகில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியான ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா அரசு உதவி பெறும் ஆரம்ப நிலைப் பள்ளி குழந்தைகளுடன் அன்னையின் ஜெயந்தியைக் கொண்டாடினோம். உண்மையில் அது அன்னைக்குப் பெரும் ஆனந்தத்தைத் தந்திருக்கும்.
அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா 15.12.22- வியாழன்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்.

thanjavur