Fire Accident - Nagappattinam
நாகப்பட்டினம் காட்டுநாயக்கன் தெருவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பெரிய தீ விபத்து நடந்தது. இதில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக, அதில் 21 வீடுகள் தரைமட்டம் ஆனது. அந்த வீடுகளுக்கு NDSO குழுக்களுடன் இணைந்து இன்று சில நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வேண்டிய புதிய ஆடைகளை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் வழங்கியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள காட்டு நாயக்கன் தெருவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களின் 21 வீடுகள் பாதிக்கப்பட்டன. அவற்றுள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட 9 வீடுகளை ஜி ஐ சீட்டுகளைக் கொண்டு ரூபாய் 10 லட்சம் செலவில் தீப்பிடிக்காத வீடுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் புனரமைத்து தந்தது. 02.06.21 புதன்கிழமையன்று புனரமைக்கப்பட்ட வீடுகளை துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கினோம்.
A major fire broke out on Kaatu Nayakkan Street in Nagapattinam this April. 21 houses of people belonging to the scavenger community were affected. Sri Ramakrishna Math, Thanjavur renovated 9 of the worst affected houses with GI sheets at a cost of Rs. 10 lakhs. The houses were handed over to the people on 2.6.21, Wednesday. The district collector of Nagapattinam appreciated this service very much.