Click Here
↓
Click Here
↓
1. அஞ்சாதே, அஞ்சாதே!
2. நீ எதையும் சாதிக்க முடியும்.
3. தைரியமாக இரு சகோதரா!
4. வா, வீர முயற்சி ஏதாவது செய்.
5. நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.
6. வலிமையானவனாக நினை; நீ வலிமை மிக்கவனாவாய்.
7. பெரும் ஊக்கம், அளவற்ற அஞ்சாமை, அளவற்ற பொறுமை - இவையே நமக்குத் தேவை.
8. பாவங்களுள் பெரிய பாவம் பயமே.
9. கோழைத்தனத்தை உதறித் தள்ளு.
10. நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது; வீரனாக இரு.
11. நம்பிக்கை, நம்பிக்கை - இதுவே மகிமையின் ரகசியம்.
12. வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்.
13. ஏழைகளுக்காக இதயத்தின் ரத்தத்தை வடிப்பவனே, மகாத்மா.
14. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலரது வரலாறே உலக வரலாறு.
15. கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல.
16. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன.
17. எஜமானன் போல் வேலை செய்; அடிமையாக அல்ல.
18. தனிமனித நிலை உயர்த்தப்பட்டால் நாடும், நிறுவனங்களும் நிச்சயம் உயர்வடையும்.
19. தூய்மை, பொறுமை, விடா முயற்சி - இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.
20. இந்திய மண்ணே என் சொர்க்கம். இந்திய நலனே எனது நலன்.
21. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
22. தீமையை எதிர்த்து நில்; அஞ்சாமல் எதிர்த்து நில்.
23. உயிரே போனாலும் தைரியத்தைக் கைவிடாதே.
24. பலவீனத்திற்குப் பரிகாரம் ஓயாது பலவீனத்தை நினைப்பதல்ல; மாறாக பலத்தை நினைப்பதுதான்.
25. இரும்புத் தசையும், எஃகு நரம்புகளும், வஜ்ராயுதம் போன்ற மனவலிமையும் உள்ளவர்களே நமக்குத் தேவை.
26. இரக்கமுள்ள இதயம், சிந்திக்கும் மூளை, வேலை செய்யும் கைகள் இவையே நமக்குத் தேவை.
27. உன்னை நம்பு. எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது.
28. உறுதியான நம்பிக்கைகளே உன்னத செயல்களுக்கு வழிவகுக்கும்.
29. சிறந்த குணத்தை உருவாக்கும், மனவலிமையை வளர்க்கும், அறிவை விரியச் செய்யும், ஒருவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்யும் கல்வியே நமக்குத் தேவை.
30. அச்சமில்லை, அச்சமில்லை என முழங்கு. அச்சமே சாவு. அதுவே பாவம். அதுவே நரகம்.
31.இளைஞர்களே, நாம் வேண்டுவதெல்லாம் உற்சாகம், உற்சாகமே.
32. எல்லையற்ற சக்தியும், எல்லையற்ற ஊக்கமும், எல்லையற்ற தைரியமும், எல்லையற்ற பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போதுதான் மகத்தான விஷயங்களைச் சாதிக்க முடியும்.
33. கோடானுகோடி மக்கள் பசியிலும் அறியாமையிலும் மூழ்கியுள்ளனர். அவர்களது செலவில் கல்வி பெற்றுக் கொண்டு அவர்களுக்காக ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் ஒவ்வொருவனும் துரோகியே.
34. உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். லட்சியத்தைப் பற்றிக் கொண்டு முன்னேறியபடியே இரு!
35. நம் சமுதாயமான தேசியக் கப்பலில், ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா? அந்த ஓட்டைகளை நாம் அடைப்போம், வாருங்கள்.
36. துறவும் தொண்டுமே இந்தியாவின் லட்சியங்கள்.
37. வேறு எந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதே சமயம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாதிருப்போம்.
38. வீரர்களே! கட்டுண்டவர்களின் தளைகளை வெட்டியெறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளி பெறச் செய்யவும் முன்னேறுங்கள்.
39.நம்புங்கள்; உறுதியாக நம்புங்கள். இந்தியர்கள் விழித்தெழ வேண்டும் என்ற கடவுளின் கட்டளை பிறந்துவிட்டது.
40.நாம் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொருத்தே அமையும்.